பிரதேச மட்ட இளைஞர் தொண்டர்களுக்கான அனர்த்த நிலையின் போது மேற்கொள்ள வேண்டியமுன்னாயத்த நிலை தொடர்பில் கலந்துரையாடல்.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.  ஏ. சி. எம் . ரியாஸ் அவர்களின்வழிகாட்டலில்  கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டம் தாயரித்தல் திட்டத்தின் கீழ் பிரதேச  மட்டஇளைஞர் தொண்டர்களுக்கான அனர்த்த  நிலையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நிலைதொடர்பிலா

கலந்துரையாடல் கல்முனை பிரதேச

செயலகத்தில் (01)  இன்று  இடம்பெற்றதுபிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் அனர்த்த நிலையின் போது  பிரதேச  மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு  கிராமிய திட்ட வரைபு செய்வது தொடர்பாகமேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை

தொடர்பிலும், அனர்த்த நிலையின் போது

கிராம மட்டத்தில் பாதிக்கப் படக் கூடிய பகுதிகளை இனங்கானல் ,பிரதேச ரீதியாக அமைக்கப் பட்ட குழுக்கள்(அனர்த்த முகாமைத்துவ குழு மீட்புக் குழு , நிவாரணக்குழு ) பற்றியும் மற்றும் அனர்த்த நிலையின் போது பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில்  வெளியேற்றுவது மற்றும் அறிவுறுத்தல்கள் மேற் கொள்வதுபற்றியும் , தொடர்பாடல் திறன், காலநிலை மற்றும் அனர்த்த நிலையின் போது முன்னெச்சரிக்கை விடயங்களைஎவ்வாறு

பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் தேவையான முன்னாயத்த விடயங்கள் தொடர்பில் பிரதேச  மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .

கல்முனை பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களான

றாசிக் நபாயிஸ் ,என். எம் . பஸ்மிலா ஆகியோர்

கலந்து கொண்டு பிரதேச  மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு விளக்கமளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.