யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – மௌன தொழிற்சங்கப் போராட்டம்…

நீண்ட காலமாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் எதிர்நோக்கப்படும் தீர்க்கப்படாத பிரச்சினைகள்.
1) 2016/17 இந்த சுற்று நிருபத்தின் பிரகாரம் அரசாங்க ஊழியர்களுக்கு 106-109% அதிகரிப்பும், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு 90-92% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அநீதியான அதிகரிப்பு.
(Salary Anomalies) UGC Commission Circular 17/2016
2016-2020 வரை அரசாங்க ஊழியர்கள்  107% சம்பள அதிகரிப்பு  வழங்கப்பட்டு தற்போது வரை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 90-92%  அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதுடன் 2020 ல் அடிப்படைச் சம்பளத்தில் 15% ஐ பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்கள் இழக்கின்றனர்.

2) அரசாங்க ஊழியர்களுக்கு 2019 யூலை மாத முதல் அதிகரித்து வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு 2500/- (Additional Allowance) இதுவரை வழங்கப்படவில்லை.
அரசாங்க ஊழியர்களுக்காக கடந்த அரசாங்கத்தில், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பள மறுசீரமைப்புக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் 2020 ஜனவரியிலிருந்து இரண்டு கட்டங்களாக (01.01.2020 – 50% , 01.01.2021 – 50%) அதிகரிக்கப்படவிருந்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பானது ( ரூபாய் 3000 – 23874) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3) தற்போது காணப்படுகின்ற MCA கொடுப்பனவு 45% லிருந்து அதிகரிக்கப்பட்டு 100% ஐ பெற்றுக்கொள்வதாக போராடிய பின்னர், 70% வரை அதிகரிக்க முடியும் என்று கூறப்பட்ட போதிலும் 2018 க்கு பின்னர் MCA கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.

4) ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட வினைத்திறனான ஓய்வூதியம் (Pension Scheme) இல்லை.

5) சகல பல்கலைக்கழகங்களிலும் ஒரு பொதுவான ஒழுங்கமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம் (Insurance Scheme) இல்லை.

6) கடன் வசதிகள் (Loan Facilities) மறுசீரமைக்கப்படவில்லை.

07) ஆணைக்குழுவின் 876ஆம் இலக்கச் சுற்றுநிருபம் இரத்துச் செய்யப்படல் வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் கல்விசாராப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பு UGC Circular 876இன் மூலமே நடைபெறுகின்றது. இச்சுற்றுநிருபமானது உயர்கல்வி அமைச்சுப்பட்டியலில் இருந்தே கல்விசாராப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என கூறுகின்றது. இதனால் தகுவாய்ந்த அரசியல் வாதிகளின் செல்வாக்கில்லாத சாதாரண பொதுமக்கள் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது உள்ளதுடன் பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீட்டையும், ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஊழலையும் ஏற்படுத்துகின்றது. எனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 876 ஆம் இலக்க சுற்றுநிருபம் விலக்கப்பட்டு திறந்த விளம்பரங்கள் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெற வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.