லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது – ஹரீன் பெர்னாண்டோ

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தை வேறொரு பிரிவினருக்கு விற்பனை செய்வதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் முயற்சியாக இந்த எரிவாயு தொடர்பான வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புரொப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவை 50 சதவீதமாக மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புரொப்பேன் 40 அமெரிக்க டொலருக்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எரிவாயுவைக் கொண்டு வருவதற்கு போதிய நிதி இல்லாத நாட்டில் ஏன் புரொப்பேன் கலவையை ஏன் 50% ஆக உயர்த்தியது என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.
எரிவாயு சிலிண்டர்கள் காரணமின்றி வெடிப்பதில்லை. எரிவாயு சிலிண்டரின் ரெகுலேட்டர் தொடர்பில் தற்போது பிரச்சினை இருப்பதாக கூறப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டரின் கலவை எந்த நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது மற்றும் எப்போது அனுப்பப்பட்டது
என சரிபார்க்கப்படுகிறது.
எனவே அது காரணமாக இருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று அண்மையில் கையளிக்கப்பட்டது
.
எனவே நிறுவனத்தை விற்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், எரிவாயு வெடிப்பால் தேவை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் விறகு அடுப்பு என மாற்று வழிகளை மக்கள் இப்போது பயன்படுத்துகின்றனர்
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அரசாங்கத்திற்கு இலாபம் ஈட்டி வருவதாகவும், தேவை குறையும் போது அரசாங்கத்திற்கு விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
எனவே, சமீபத்திய வெடிப்புகள் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தை விற்கும் முயற்சியா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
May be an image of 1 person

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.