எரிவாயு வெடிப்பினால் ஏற்படும் காயங்கள், உயிரிழப்புகளுக்கு எரிவாயு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் – கீதா குமாரசிங்க

எரிவாயு வெடிப்பினால் ஏற்படும் காயங்கள் அல்லது உயிரிழப்புகளுக்கு எரிவாயு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு தொடர்பான விபத்துக்களில் தனக்கும் பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இன்று நான் ஏன் இப்படி பேசுகிறேன்? 2017ல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு எனது வீட்டில் இருந்த அலமாரியும், முழு வீட்டின் பாதியும் சேதமடைந்தது , என் உயிருக்கே பாரிய ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை நானும் அனுபவித்ததால் ஆபத்து எனக்கு தெரியும் என அவர் இதன் போது தெரிவித்தார்.
மக்கள் அச்சத்துடன் வாழ முடியாது. எரிவாயு வெடிப்பு சம்பவங்களில் எவரேனும் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கென குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிப்புகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பிரச்சினை ஏற்பட்டால், எரிவாயு நிறுவனங்கள் சிலிண்டர்களை மீளப் பெற்று நுகர்வோருக்கு புதிய சிலிண்டர்களை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.