உலகின் அரிதான நாகலிங்க மரம் மடத்தடியில் நட்டுவைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையிலுள்ள ஒரேயொரு மீனாட்சிஅம்மன் ஆலயமான வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் மகா குடமுழுக்கு வைபவம் அடுத்தவருடம் (2022) மார்ச் மாதமளவில் நடைபெறும்.
அதற்கான  பொதுக்கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல தமிழ்க்கிராமங்களிலுமுள்ள மீனாட்சிஅம்மன் அடியார்கள் சுதந்திரமாக கலந்துகொள்ள முடியும் எனவும்இ அன்றையதினம் அவர்களிலிருந்து மகா கும்பாபிசேகக்குழு உள்ளிட்ட பல உபகுழுக்களும் தெரிவுசெய்யப்படுமென ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் அங்கு பகிரங்கமாக அழைப்புவிடுத்து அறிவித்தல் விடுத்தார்.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்மன் புதிய ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தiயொட்டிய முகப்புக் கோபரத்திற்கான அடிக்கல் நடும்வைபவம் வெள்ளியன்று நடைபெற்றது.
இதேவேளை உலகில் அரிதாக கிடைக்கின்ற  நாகலிங்க மரத்தின் கன்று  வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்மன் புதிய ஆலயத்தில் வெள்ளியன்று நட்டுவைக்கப்பட்டது.

ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற மரம்நடும் iவைபவத்தில்  ஆலயஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாகசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.
பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழி;காட்டலில் ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இவ் அரிதாக மரத்தை நட்டுவைத்தார்.

நாகலிங்கமரத்தின் மகிமை பற்றி ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அங்கு தெரிவிக்கையில்:
நாகலிங்கம் தென்னமெரிக்காவின் வடபகுதி வெப்பவலய அமெரிக்கா தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.
இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.இலங்கையின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்படுகின்றன. சிங்கள மொழியில் இது சல் (සල්) என அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் பழம் முற்றி பழுக்க 1 வருடம் முதல் 18 மாதம் வரை கூட ஆகலாம்.
இம்மரத்தின் இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன் டிரிப்டான்ரின் இன்டிகோ இன்டுருபின் ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.
இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து பூஞ்சை கிருமியால் தோன்றும் சொறி சிரங்கு படர் தாமரை படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.என்றார்.

ஜனாதிபதியின் 1லட்சம் கிலோமீற்றர் வீதிஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ்இ  வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி கொங்கிறீட் வீதியாக புனர்நிருமாணம் செய்யப்படவிருக்கின்றது.

நீண்டகாலமாக இவ்வீதி புனரமைக்கப்படாமல் தூர்ந்துபோய் போக்குவரத்திற்கு பொருத்தமில்லாததாக இருந்தது. அவ்வீதியை பிரதமரின் 1லட்சம் கிலோமீற்றர் வீதிஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் புனரமைக்க ஏற்பாடாகியுள்ளது.

அதற்கான அளவை மதிப்பீட்டுவேலைகள்  அங்கு ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் முன்னிலையில் நடைபெற்றது. வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனைப்பிராந்திய  சிரேஸ்ட தொழினுட்பஉத்தியோகத்தர் எ.எம்.ஜௌபர் மதிப்பீட்டுவேலைகளை மேற்கொண்டார்.

நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் ரி.யோகநாயகன் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.அரியநாயகம் ஆகியோர் மேற்கொண்ட திவீரமுயற்சியின் காரணமாக சுமார் ஒன்றரை கிலோமீற்றர் வீதி  ஆலயத்திற்காக கொங்கிறீட் வீதியாக போடப்படவிருக்கின்றது.


மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் மகா குடமுழுக்கு வைபவம் அடுத்தவருடம்;2022 மார்ச் மாதமளவில் நடைபெறும்.அதற்கான  பொதுக்கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.