அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16ம் நாள் நிகழ்வு…

(சுமன்)
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்பாட்டு வாரத்தில் கடின உழைப்பினால் முன்வந்த பெண்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபவனியும் இன்று மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
வருடாவருடம் கார்த்திகை 25 தொடக்கம் மார்கழி 10ம் திகதி வரை சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்களை விழிக்கும் தினங்களில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக பெண்களுக்கு தேவையான சட்ட விழிப்புனர்வு, ஆளுமை விருத்தி செயற்பாடுகள் மற்றும் கௌரவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடின உழைப்பினால் முன்வந்த பெண்களை கௌரவிக்கும் முகமாகவும் அவர்களது உரிமை சார்ந்த விடயங்களை வெளிக்கொண்டுவரும் முகமாகவும் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு தன்னாமுனை மியானி வளாகத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றதோடு பொலிஸ் பிரிவு, வைத்திய பிரிவு, விளையாட்டு துறை, சமையல்துறை, பாதுகாப்பு துறை இவற்றில் பணிபுரியும் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றதனைத் தெடர்ந்து கலந்து கொண்ட அதிதிகளையும் கௌரவித்து நினைவு சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு நடை பவணியானது தன்னாமுனை மியானி வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரை சென்று விழிப்புணர்வு வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருனாகரன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், மட்டக்களப்பு போதன வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன், மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன், மன்முனை பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், சிறுவர் மற்றும் மகளீர் பொலிஸ் பொறுப்பதிகாரி சுசிலா, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பணிப்பாளர் கண்டுமனி லவகுசராசா, அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமமட்ட பெண்கள் குழுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.