இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீனலுக்கு எதிராக முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை

விஜயரத்தினம் சரவணன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையால் வடபகுதி மீனவர்களுடைய வளங்கள் அழிக்கப்படுவதுடன், மீனவர்களின் வலைகளும் அறுத்துச் சேதமாக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி, சட்டமாஅதிபர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக, வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் நான்காம் திகதிவரை கையெழுத்து வேட்டை ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் 2017 இலக்கம் 01 றோளர் தொடர்பான சட்டத்தினையும், 2018 வெளிநாட்டுப்படகுகளைக் கண்காணிப்பதற்கான சட்டத்தியைும் நடைமுறைப்படுத்தக்கோரி மேற்கொள்ளப்படும் குறித்த கையெழுத்துவேட்டையானது 03.12.2021நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

அதற்கமை குறித்த கையெழுத்து வேட்டையில் முல்லைத்தீவுமாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்ததுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் இந்த கையெழுத்துவேட்டையில் பங்கேற்றிருந்தார்.

மேலும் இந்தக் கையெழுத்துவேட்டையின் பின்னர் கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திலே வளக்குத்தாக்கல் செய்யவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.