கொக்கிளாயில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய் மேற்கு கிராமசேவர் பிரிவில், புளியமுனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 03.12.2021 வெள்ளியன்று மாலைவேளை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

குறிப்பாக வெள்ளியன்று மின் வெட்டு அமுலில் இருந்த நிலையில், வீட்டு வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக எரிவாயு அடுப்பை இயக்கியபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற வீட்டார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் வெடிப்புச் சம்பவத்தின் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்