மின்- பாவனையாளர்களுக்கு கல்முனை பிரதேச பிரதான மின் பொறியியலாளர் தரும் அறிவித்தல்

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் பராமரிப்பு வேலைகள்  காரணமாக  தற்காலிக   மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியபிரதேச  மின் பொறியலாளர் ஏ.எம் ஹைக்கல்  அறிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை(04) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கல்முனை வைத்தியசாலை வீதி, தொடக்கம் தாளவெட்டுவான், பிறதர் ஹவூஸ் வீதி,மணல்சேனை ,பாண்டிருப்பு,மருதமுனை, துரைவந்தியமேடு ,பெரியநீலாவணை ,ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேற்குறித்த பகுதிகளுக்கான வேலைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் நிறைவடைகின்ற போது உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்