ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு : 32 துறை சார்ந்தவர்களுக்கு கௌரவமளிப்பு !

அக்கரைப்பற்று ஆர்.கே.எஸ். வலையமைப்பு இரண்டாவது தடவையாக நடத்திய ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இம்முறை கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் பாடசாலை அதிபரும், அக்கரைப்பற்று ஆர்.கே.எஸ். வலையமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அதில் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆளுமைக்கான விருதினை அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ், 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர் விருதினை சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமர், பூர்விக சமூகத்தின் நம்பிக்கை விருதினை விக்டர் ஜெகன், சிறந்த கல்விச்சேவைக்கான விருதினை ஏ.எம்.எம். தாஜுதீன், சிறந்த சமூகவியலாளர் விருதினை எம்.எஸ். மர்சூக், சிறுவர் மேம்பாட்டுக்கான விருதினை எம்.எச்.எம். உவைஸ், சமூக சேவைக்கான விருதினை ஏ.பி. பதுருதின், வளர்ந்துவரும் அரசியல் தலைமைத்துவ விருதினை எம்.எஸ்.அமீன், இளம் தலைமைத்துவ சமூக விருதினை எம்.ஐ. அரசாத், சிறந்த இளம் தொழிலதிபர் விருதினை அனீஸ் மால், இளம் தொழிலதிபர் விருதினை வை.எம். ஹக்கீம், மக்கள் அபிமான விருதினை ஆதம் அமீர் ஆகியோரும் சிறந்த மனிதாபிமான சட்டத்தரணிக்கான விருதினை சட்டத்தரணி கே.எல். சமீம், சிறந்த ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகத்திற் கான விருதினை டாக்டர் எம்.ஏ. நபில்,  சிறந்த ஆயுர்வேத வைத்தியர் விருதினை டாக்டர் ஏ.சி. டில்ஷாத், மருந்தாளருக்கான விருதினை ஏ.ஆர்.எம். ரஹ்மான், நல்லிணக்கத்துக்கான விருதினை எஸ்.எம். லாபிர், சமூக தலைவருக்கான விருதினை எம்.எஸ். ஜுனைதீன், பிராந்திய சுகாதார சேவைகளுக்கான விருதினை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். அகிலன், சிறந்த எழுத்தாளருக்கான விருதினை கலாபூஷணம் என்.எல். நூர்தீன், விளையாட்டுத்துறை விருதினை ஏ.எல். நாஸர், சிறந்த மனிதாபிமான விருதினை ஏ.எம். பைரூஸ், பெண்கள் மேம்பாட்டுக்கான விருதினை ஜமீலா ஹமீட், ஆளுமைப் பெண்ணுக்கான விருதினை உதவிப்பிரதேச செயலாளர் எப். நஹீஜா முஸாபிர், சமூக சேவைக்கான விருதினை ஏ.எல்.எம். இஸ்மாயில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். றமீஸின் நெறிப்படுத்தலில் ஆர்.கே.எஸ். வலையமைப்பின் தவிசாளர் எம்.எம். றுக்சானின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் கிழக்கு மாகாண சபை பேரவை தலைவர் கலாநிதி எம்.கோபாலரத்னம், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா, அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். அகிலன் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்