முஸ்லிங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள கட்சிபேதங்களை துறந்து எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டிய காலம் வந்துள்ளது : பைசால் காசிம் எம்.பி அழைப்பு !

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், சமூகத்தை பாதுகாக்கவும் கட்சிபேதங்களை துறந்து எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டிய காலம் வந்துள்ளது. இவ்வளவு காலமும் கவனயீனமாக இருந்தாலும் கூட நாங்கள் இப்போது கண்விழிக்க வேண்டிய காலம் இது. சமூக சிந்தனையாளர்கள் அதற்கு பக்கபலமாக எங்களுடன் இருக்க வேண்டும். கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா மக்களின் காணி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசினோம். மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அந்த விடயம் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தும் அது பற்றி சிந்திக்காமல், நடவடிக்கை எடுக்காமல் இன்னும் நீடித்து இன்றுவரை முடிந்தபாடில்லை. அந்த மக்கள் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்துள்ளனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் நேற்றிரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அந்த மாவட்டத்தில் எத்தனையோ எம்.பிக்கள், அமைச்சர்கள் இருந்தும் எதோ ஒரு சக்தியின் உந்துதலினால் பறிபோன காணிகளினுடாக கல்குடா சமூகத்தின் நிலையை நாங்கள் சிந்திக்க வேண்டும். இதே போன்று எல்லா மாவட்டங்களிலும் பிரச்சினைகள் இருப்பதை காண்கிறோம். எந்த கட்சிகளுக்கு ஆதரவானவர்களாக இருந்தாலும் சமூக சேவகர்கள் முஸ்லிங்களின் பிரச்சினைகளை தீர்க்க கட்சி பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.