சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸுக்கு !

ஆர்.கே.எஸ். ஊடக நிறுவனத்தின் துறைசார் ஆளுமைகளை கெளரவித்து பாராட்டும் நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருதைப் பெற்றார்.

அவருக்கான விருதை பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைஸல் காசிம் ஆகியோர் வழங்கி வைத்தனர். ஆளுமைக்கான விருதைப் பெற்ற அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் உரையாற்றும் போது சமூகத்திற்காக எதையும் எதிர்பாராமல் பணியாற்றும் போது இப்படியான விருதுகள் மேலும் எங்களை பொறுப்பு கூறும் நபர்களாக மாற்றுகின்றன.

எவ்வளவுதான் புகழ்களை பெற்றிருந்தாலும் இலகுவாக அரசியல் அதிகாரங்களை பெற முடியாது. உதாரணத்திற்கு உலகப் புகழ் பெற்ற நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவரால் வெல்ல முடியாமல் போய்யுள்ளது.  தலைவர்கள் மக்களை வழிநடாத்துபவர்களாக இருக்க வேண்டும். தாம் எடுக்கும் தீர்மானங்களுக்கு அதிக விமர்சனங்கள் எதிரத்தரப்பிலிருந்து அதிகமாகவே  வெளிவரும்.

சமூகத்திற்கான அரசியல் எனும் போது நமக்கான அரசியல் களம் போராட்டமாகவே அமைந்து விடுவதுண்டு. கிழக்கு மண்ணிற்கான தலைமைத்துவ வெற்றிடம் அப்படியே நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கின்றது.இந்த வெற்றிடத்தை நிரப்பும் தகுதி ஹரீஸ் எம்.பிடம் உள்ளது என்பதை வேறு கட்சியைச் சேர்ந்த என்னால் உணர முடிகிறது. அறிவு ரீதியாகவும். சமூகப் பற்றாளராகவும் ஏன் களத்தில் நின்று போராடும் குணமுள்ளவர்களால் தான் தான் சார்ந்த சமூகத்தை வழிநடாத்த முடியும் என்பது எனது நம்பிக்கை. ஆகவே ஹரீஸ் எம்.பிக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.