சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமைக்கு.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெயை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.

சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய் இன்மை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த நவம்பர் 15ஆம் திகதி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அதன் பணிகள் கடந்த 15ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.