பிரியந்தவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொடூரமாக சித்தரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

உடல் தீ வைக்கப்பட்டுள்ளமையினால், அவரது உடல் பாகங்கள், சீல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து அன்னாரது உடல் பாகங்கள் நேற்று (06) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட உடல் பாகங்கள், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அன்னாரது பூதவுடல் அவரது கனேமுல்ல பகுதியிலுள்ள வீட்டிற்கு இன்று (07) அதிகாலை 3 மணியளவில் கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை (08) இடம்பெறவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்