கல்முனை மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 21 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது… (த.தே.கூ 02 எதிர்ப்பு 05 நடுநிலைமை)
(சுமன்)
கல்முனை மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 21 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
39 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகரசபையில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டிற்கு ஆதரவாக 21 உறுப்பினர்களும், எதிராக 06 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்கள் இதன்போது நடுநிலைமை வகித்தனர். மேலும் 07 உறுப்பினர்கள் இன்றைய பாதீட்டு அமர்விற்கு
சமுகமளிக்கவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களில் ராஜன் மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவர் மாத்திரம் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்ததுடன் மற்றைய ஐந்து உறுப்பினர்களும் பாதீட்டில் நடுநிலைமை வகித்தனர்.
அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு இதுவரை காலமும் எவ்வித ஒத்துழைப்புகளும், ஆதரவும் வழங்கப்படாதமையால் மீண்டும் மீண்டும் நடுநிலைமையோ ஆதரவோ வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை என்பதன் காரணமாகவும், கல்முனை மக்களின் எதிர்பார்ப்பின் பிரகாரமும் இன்றைய இந்த பாதீட்டின் போது எதிர்த்து வாக்களித்ததாக மாநகரசபை உறுப்பினர் ராஜன் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.







கருத்துக்களேதுமில்லை