ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 8 ஆவது சம்மேளனக் கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எஸ்.எச். அனுர ஜெயந்த மற்றும் சுனில் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர்வழங்கல் அதிகாரசபையின் பிரதித் தவிசாளருமான நிமல் ஆர். ரணவக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
விசேட அதிதிகளாக, நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிழக்கு மாகாண அரசியற் பொறுப்பாளருமான எம்.எப்.ஏ.மரைக்கார், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அமைப்பாளரான றைஷா மகறூப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.