தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நிந்தவூர் பிரதேசத்தில் இன்று…

-காந்தன்-

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு
கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு (12.12.2021) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 08.30 மணி ஶ்ரீ சிங்காரபுர மாரியம்மன் ஆலயம், சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை – அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் திருமுன்னிலை அதிதி சிவ ஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்- காரைதீவு அவர்களும் ஜனாப்.எ. எம். அப்துல் லத்தீப் பிரதேசசெயலாளர் பிரதேசசெயலகம் நிந்தவூர் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

பிரதம அதிதியாக திரு வே.ஜெகதீசன் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்டச்செயலகம் அம்பாறை அவர்களின் பங்குபற்றலுடன் கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலம், அறநெறி பாடசாலை மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட பாடநூல் கண்காட்சி, நந்திக் கொடியேற்றம், அறநெறிக் கீதம், ஆலயவழிபாடு, நினைவுகள் திரைநீக்கம், குருபூசை, ஞாபகார்த்த புனித மரநடுகை, பிடியரிசி சேமிப்பு மற்றும் வஸ்து தானம் என பல நிகழ்வுகள் சிறந்த முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.