ABDULSALAM YAAEEM TRINCO (மீன் வியாபாரிகளுக்கு சொந்த நிதியில் தராசுகளை வழங்கிய ரகுநாதன் தங்கவடிவேல்)

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை உப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மீன் வியாபாரிகளுக்கு சொந்த நிதியில் தராசுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சாம்பல் தீவு பகுதியில் இடம்பெற்றது.
திருகோணமலை நலன்புரிச்சங்கம் கனடா என்ற அமைப்பினரிடம் கடல் அன்னை மீன் வியாபாரிகள் கூட்டுறவுச்சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ரகுநாதன் தங்கவடிவேல் என்பவரின் சொந்த நிதியிலிருந்து இன்று (11) தராசுகள் வழங்கிவைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று  காரணமாக மீன் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் தராசுகள் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாகவும் மீனவர்கள் மீன் விற்பனை நடவடிக்கையின் போது
 பாதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக முதற்கட்டமாக  தராசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் வசித்து வந்து வசித்து வரும் சமூக சேவையாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ்  மற்றும் மீன் வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்