பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொருட்கள் வழங்கி வைப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொருட்கள் வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபிர்

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸின் 2021ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டின் மூலம்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட மதஸ்தலங்கள், கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கான அலுவலக பாவனை பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (13) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதேச செயலக கேட்போர் கூடங்களில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வுகளில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தத்தார்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைசேனை, இறக்காமம், நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேச செயலகங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கான உதவிகள் இதன்போது வழங்கிவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்