அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு….

-காந்தன்-

இன்று அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு கழகத்தினருக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வானது (13) இன்று திங்கட்கிழமை திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திரு. J. R. டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் ஆலையடிவேம்பு திருமதி.M.மயூரன் அவர்களும், Dr. N. அருந்திரன் DMO காரைதீவு, உடற்கல்வி பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் ஜனாப். H. நைரூஸ்கான், பாடசாலை அபிவிருத்தி செயலாளர் திரு. P. தனிகாசலம், மேலும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்