நாகர் கோவில் மகாவித்தியாலயத்தின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார் சிறீதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் நாகர்கோவில் மகாவித்தியாலயத்திற்கு  களவிஜயம் மேற்கொண்டு பாடசாலையின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

பாடசாலையின் முதல்வர் K. கண்ணதாசனினால் பாடசாலையின் தேவைகள் தொடர்பிலும் மழைக்காலங்களில் மாணவர்கள் படும் அசௌகரியங்கள் நீர் வகுப்புக்களில் தேங்கி நிற்பது தொடர்பிலும் வகுப்பறைக்கட்டிடங்களின் பற்றாக்குறை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்து இருக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் நிரந்தர கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினருடன் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் சுரேஸ்குமார் பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் சந்திப்பில் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்