மகாவலி ஆற்றில் குதித்த பெண்ணைக் காணவில்லை

மஹியங்கனையில் மகாவலி ஆற்றில் குதித்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று மாலை இளம் ஜோடி ஒன்று மகாவலி ஆற்றில் குதித்துள்ளதுடன், ஆண் நபர் நீந்திக் கரைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் கஸ்கொல்ல, ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் நேற்றுக் காலை தனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து சென்றது தெரிய வந்ததுள்ளது. அவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் மகாவலி ஆற்றில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்