முதலீட்டுச் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அரசாங்கம் விதிமுறைகளை மீறியது : சஜித்

முதலீட்டுச் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அரசாங்கம் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பெரும் தொகை சம்பளம் வழங்கப்படும் என ஒப்பந்தங்களுடன் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றக் குழுக்களின் முன்னேற்றத்தை சீர்குலைக்க அரசாங்கம் முயல்கிறது. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் பலர் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, முதலீட்டுச் சபையின் தீர்மானங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சுற்றறிக்கைகள் மற்றும் ஆட்சேர்ப்பு கொள்கைகளை மீறி, அதிக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங் கும் வகையில் ஏறக்குறைய ஏழு பேர் உயர்மட்ட பதவிகளுக்காக இலங்கை முதலீட்டு சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் வெளிப் படுத்தினார். பொது நிறுவனங்களுக்கான குழு, இலங்கை முதலீட்டு சபை நியமனங்கள் மற்றும் வரி செலுத்துவோர் பணத் தைச் செலவு செய்தல் போன்றவை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர்கள் மற்றும் தலைவர் கேள்வி கேட்க விரும்பவில்லை. எனினும் இராஜினாமா செய்ய முற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.