முச்சக்கரவண்டி – கார் விபத்து – இருவர் பலத்த காயம்

சாரதி பயிற்றுவிப்பு பாடசாலை ஒன்றினால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது கார் ஒன்று குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு ஆண்கள் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் 17.12.2021 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சிக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டி, கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் மோதுண்ட முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த செய்தியை சேகரிக்க சென்ற எமது ஊடகவியலாளருக்கும் காரில் பயணித்த பெண் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் திம்புள பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.