சத்தியலிங்கம் மற்றும் ரவிகரன் சந்திப்பு

முன்னாள் வடமாகாணசுகாதார அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான பத்மநாதன் சத்தியலிங்கத்திற்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குமிடையில் 19.12.2021 இன்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள ப.சத்தியலிங்கத்தின் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும் இக்கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.