ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளராக லக்ஷயன் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக லக்ஷயன் முத்துக்குமாரசாமி இன்று (20) திங்கட்கிழமை
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் அவரது காரியாலயத்தில் வைத்து இந்நியமனம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில், ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்