சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் தொற்றா நோய் மருத்துவ விழிப்புணர்வு.

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (G.M.M.S) 35 வயதிற்கு மேற்பட்ட சகல ஆசிரியர்களுக்கும் சாய்ந்தமருது பிரதேச வையத்திய குழாத்தினரால் தொற்றா நோய் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வும் பரிசோதனையும் பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸின் அழைப்பின்பேரில், அவ் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இதன் பிரதான வளவாளராக பிரதம தாதி உத்தியோகத்தர் பீ.எம். நசுறுத்தீனினால் சமூகத்தில் அதிகரித்துவரும் தொற்றா நோய் தொடர்பாகவும் ஆபத்தான உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பாகவும் குறிப்பாக பதின்ம வயதினருக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தொடர்பாகவும் சிறந்த விளக்கவுரையும் அறிவுரையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைத்திய பரிசோதனை முகாமினை சிறப்பாக நடாத்தியமைக்காக பாடசாலை ஆசிரியர் நலன்புரி அமைப்பு மற்றும் பாடசாலை சுகாதாரக் கழகம், வைத்தியருக்கும் அதன் குழுமத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.