வவுணதீவில் கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக  “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக
மட்டக்களப்பு மண்முனை மேற்கு  பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு இறக்கத்துமுனை கிராமத்திற்கான வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது பல வருட காலமாக கிரவல் வீதியாக காணப்பட்ட நிலையில் குறித்த வீதியால் பயணிப்பதற்கு சிரமப்பட்ட கிராம மக்கள் குறித்த வீதியை புனரமைத்து தருமாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியோழேந்திரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த விதியானது கொங்கிறீட் வீதியாக புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபார்சில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சின்
05 கோடியே 83 இலட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இரண்டு கிலோ மீற்றர் வீதிக்கான வேலைத்திட்டத்தினை  ஆரம்பித்து வைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு குறித்த வீதிக்கான புனரமைப்பு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் ஆலயங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.