வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா – 2021…

(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரசித்திபெற்ற தொன்மை வாய்ந்த வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் இவ்வாண்டிற்கான ஒளி விழா நிகழ்வானது பங்குத்தந்தை அருட்பணி சீ.வி.அன்னதாசன் அடிகளார் தலைமையில் கடந்த 22.12.2021 ஆந்திகதி ஆலய வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது மறைக்கல்வி மாணவர்களின் நடனம், பாலன் பிறப்பை சித்தரிக்கும் நாடகம்,  மற்றும் கரோல் கீதம் பாடுதல் என்பன இடம்பெற்றிருந்தது.
மறைக்கல்வி மாணவர்களின் திறமையினை பாராட்டும் வண்ணம் பங்குத்தந்தையினால் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், ஆலய மேற்புப் பணிச்சபை உறுப்பினர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட ஊர்மக்கள் அடங்கலாக பெருமளவானோர் சுகாதார வழிமுறையினைப்பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்