கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸ கால்டன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கரோல் இசை நிகழ்ச்சி.

கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸ முன்பள்ளி மாவணர்களின் வருடாந்த நத்தார் கரோல் இசை நிகழ்ச்சி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் நேற்று (22) பிற்பகல் மாளிகாவத்தை கால்டன் முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்றது.

கொழும்பு மாளிகாவத்தை மற்றும் கல்கிஸ்ஸ முன்பள்ளி மாணவர்கள் இதன்போது கரோல் கீதம் இசைத்து தத்தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவ மாணவியரின் திறமைகளை பாராட்டிய கௌரவ பிரதமர், மாணவர்களின் கரோல் கீதத்தை இரசித்தார்.

கால்டன் முன்பள்ளி குழுமத்தின் பணிப்பாளரும் அதிபருமான கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கௌரவ பிரதமருடன் நிகழ்வை கண்டுகளித்தார்.

நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மாணவர்களின் கரோல் இசை நிகழ்வை கண்டு களிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியின் பாரியார் திருமதி.அயோமா ராஜபக்ஷ, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, கௌரவ இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் இந்தோனேஷியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, மியன்மார் மற்றும் ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தூதுவர்களின் மனைவிமார் மற்றும் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்