சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் சிரமதானம் முன்னெடுப்பு.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று (24) சிரமதானம் செய்யப்பட்டன.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதம பொலிஸ் பரிசோதகர்  எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் சிரமதான பணியினை சனிக்கிழமை(24) பொலிஸார் முன்னெடுத்தனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் உள்ள குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் துப்பரவு செய்யப்பட்டன.

இச்சிரமதானத்திற்கு பொலிஸ் நிலைய சுற்றுச்சூழலில் உள்ள பொதுமக்களும் தங்களது  ஒத்துழைப்புக்களை  சிரமதான நிகழ்விற்கு வழங்கி இருந்தனர்.

இதன்போது   வீதியோரங்களில்  தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை பொலிஸார் அகற்றி கல்முனை மாநகர சபையின் உதவியுடன் அவ்விடத்தில் இருந்து அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்