ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு எல். ஈ. டீ. மின் விளக்குகள் வழங்கிவைப்பு!

ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு எல். ஈ. டீ. மின் விளக்குகள் வழங்கிவைப்பு!
நூருள் ஹுதா உமர்
ரஹ்மத் சமூகசேவை அமைப்பானது அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களுக்கு தமது துரிதமான சேவைகளை செவ்வனே செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் கல்முனை கமு/கமு/அல்-பஹ்றியா தேசிய பாடசாலை, கல்முனை கமு/கமு/ அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த காரணத்தினால் அப்பாடசாலைகளுக்கு மின்விளக்குகள் பொறுத்தவேண்டிய தேவை காணப்பட்டது.
பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கையினை ஏற்று ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரினால் கோப்ரா எல். ஈ. டீ. மின்விளக்குகளை சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்களிடம் கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர், கமு/கமு/அல்-பஹ்றியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் மற்றும் ஆசிரியர், கல்முனை கமு/கமு/ அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் எம். ஐ. அப்துல் றஸாக் மற்றும் பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ், சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலய பிரதி அதிபர் டீ. கே. எம்.சிறாஜ் மற்றும் ஆசிரியர்களான எம். அமானுல்லாஹ், எம்.ஐ.எம். அஸ்லம் சுஜா, ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.