கௌரவ பா. உ தவராசா கலையரசன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாதர் சங்கங்கள், முதியோர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் இவ் ஆண்டுக்கான இறுதி நாளாகிய இன்றைய தினம் (31) மாலை வேளையில் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாதர் சங்கங்கள், முதியோர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தையல் இயந்திரங்கள், தளபாடங்கள் மற்றும் கூடாரங்கள் போன்ற உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்