சிறீதரன் எம்.பி யின் நிதி ஒதுக்கீட்டில் பெரிய பரந்தன் கிராமத்திற்கு தெரு விளக்குகள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெரிய பரந்தன் கிராமத்திற்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தெரு விளக்குகளை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் வழங்கி வைத்தார்.

அதன்பின் கிராம மக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பெரிய பரந்தன் வட்டார அமைப்பாளர் சு.ஜதீஸ்வரன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்