வெற்றிகரமாக நிறைவேறியது அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா – 2021

பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் பட்டமளிப்பு விழா 26.12.2021 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு  பிரதான மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது பிரதம அதிதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகர அவர்களும், கௌரவ விருந்தினராக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு முன்னால் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  அவர்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் T. தனராஜா (கல்விப் பேராசிரியர், முன்னாள் திட்ட அதிகாரி தேசிய கல்வி நிறுவனம்), பேராசிரியர் சமான் சேனாவீர (மெல்போர்ன் பல்கலைக்கழகம்- ஆஸ்திரேலியா, முன்னாள் இயக்குனர்- தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனம்), கலாநிதி ரிஸ்கான் பஷீர் (PhD) (இணைப் பேராசிரியர் – த்ரெஸ் கோர்ஜஸ் பல்கலைக்கழகம் சீனா), கலாநிதி கிறிஸ் வீட்டர் (ஆங்கில விரிவுரையாளர் வார்விக் பல்கலைக்கழகம்  ஐக்கிய இராச்சியம் , கலாநிதி ஆன்ரீவ் கிங் (கல்வி மற்றும் வணிக ஆலோசகர் நியூசிலாந்து) கலாநிதி T. விமலன் ( கவுன்சில் உறுப்பினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ஆர் . உதயகுமார் மாகாணப்பணிப்பாளர் , கல்வி  பணிமனை கொழும்பு , ஷஹீத் எம் ரிஸ்மி –  National President – All Ceylon YMMA Conference , மற்றும் பல வெளிநாட்டு பல்கலைக்கழக பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் அமேசன் கல்லூரியின் டிப்ளோமாதாரிகள் , பட்டதாரி மாணவர்களின்  பட்டமளிப்புடன் , விரிவுரையாளர்களுக்கும் , பங்குதார நிறுவனங்களுக்கும், அமேசன் கல்லூரியின் ஊழியர்களுக்கும் விசேட நினைவுச்சின்னம் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு இல்ஹாம் மரைக்கார் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 220 மாணவர்கள் தங்களுடைய பட்டத்தினை பெற்றுக் கொண்டனர்.
இதில் ஆசிரியர் பயிற்சி நெறி, உளவியலும் உளவளத்துணையும், தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், போன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே
சுய வேலைத்திட்டங்கள், (Individual Project)பயிற்சி பட்டறைகள்  (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல்,(Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன்  ஒப்பந்தங்களை  கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training  போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புகின்றதமை விசேட அம்சமாகும்.

எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளது என அதன் நிறைவேற்று பணிப்பாளர் திரு.இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புறையில் குறிப்பிட்டார்…

அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமேசன் உயர் கல்வி நிறுவனமானது , தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சின் மூன்றாம் நிலைக்கல்வி நிறு வனத்தினால் பதியப்பட்ட உயர் கல்வி நிறுவனமாகும். மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்களுடனும் , பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.
இவர்களின் அனைத்த்து பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகும் ( UGC Recognized ).

கல்வியினை புதிய பரிமாணத்தில் வழங்கி வருவதன் மூலம் மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமான கல்வி நிறுவனமாக திகழ்கிறது .

இந்நிகழ்வின் பிரதம அதீதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
சரத் வீரசேகர  அவர்களுடைய உரையில் பின்வருமாறு கூறினார்.  *இவ் வைபவத்தில்  அனைத்து பட்டதாரிகளுக்கும் தலைமைத்துவ பயிற்சி  கட்டாயம் என்பதுடன், இந்த நாட்டில் பிறக்கின்ற ஒவ்வருவரும் , நாட்டை நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் , கல்வி மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. கல்வி என்பது கண் போன்றது. அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டுமெனில் கல்வி கற்று கொண்டே இருக்க வேண்டும். கல்வி கற்பது இன்பத்தையே தரும். ஆதலால்தான் கல்வி கற்பவர்கள்  மேலும் மேலும் கல்வி கற்கவே விரும்புவார்கள். எனக் குறிப்பிட்டார்.*

மேலும் அவர் கூறுகையில் இந்த நிகழ்வில் இன , மத  வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்வதற்கான  காரணம் கல்வியே ஆகும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்