திருகோணமலையில் அரசாங்க வெளியீட்டு பணியகம் திறந்து வைப்பு…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் தலைமையில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால்
வியாழக்கிழமை (06) ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கபட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தகவல் திணைக்கள பணிப்பாளர் மெகான் அமரனாயக, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிக்கோரல, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரிவதி கலப்பதி ,சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்