வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை கிராம மட்டத்தில் ஆரம்பம் செய்தல்.

வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற “கிராமத்துடன் உரையாடல்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்  வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு செயற்திட்டத்தை ஆரம்பம் செய்யும் நிகழ்வு இன்று(07) கல்முனை பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு வாழ்வாதார உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர பிரதி மேயர் ரகுமத் மன்சூர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் றோஸன் அக்தர், எம்.எஸ்
நிசார்(ஜேபி), ஏ.சி.ஏ சத்தார், ஏ.ஆர் அமீர், எம்.எஸ் உமர் அலி,சப்றாஸ் மன்சூர்,சி.எம் முபீத், ஆரிகா காரியப்பர்,ஐ.எம் ரஜாப்தீன்,ஏ.எல் ரபீக்,அபிவிருத்தி ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா,சமூர்த்தி முகாமையாளர் என்.எம் முபீன்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா,இணைப்பாளர் சப்றாஸ் நிலாம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்