கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த மின்தகன மையானமானது கரைச்சி பிரதேச சபையின் வழிகாட்டலில் மையான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பு புலம்பெயர்ந்துள்ள மக்கள் கிளிநொச்சி வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் 25 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த மின் மையானம் அமையவுள்ளது.
மையான அபிவிருத்திக்குழுவின் தலைவர் நவரட்ணராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் சின்மயா மிசன் சுவாமிகள் அருட்தந்தை கிளிநொச்சி மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் நிதியுதவி செய்த கொடையாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்