மட்டக்களப்பில் இடம்பெற்ற சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு நிகழ்வு…

(சுமன்)

2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டு ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மட்டு ஊடக அமையத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பிலான நினைவுரைகளும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.