செலான் வங்கியினால் முன்னேடுத்து வரும் சமூக நலன் செயற்திட்டத்தின் ஒரு செயற்பாடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நோய் தொற்றில் இருந்து மக்களையும் பாடசாலை மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் முன் ஆயத்த நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் செலான் வங்கி கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் திரு M.H.M.RIZNI HUSSAN மற்றும் அவர்களினது அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைய பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளில் COVID-19 வைரஸ் தொற்றுபரவலை கட்டுப்படுத்துவதற்கான plastic பாதுகாப்பு திரைக்கவசம் இன்று செலான் வங்கி சம்மாந்துறை கிளையின் முகாமையாளர் திரு.நா.மோகனபிரகாஸ் தலைமையில் வழங்கப்பட்டது. இன் நிகழ்வில் மேலும் செலான் வங்கி சம்மாந்துறை கிளையின் ஏனைய ஊழியர்களும், வங்கி நலன் விரும்பிகளும், சுகாதார அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்…..
கருத்துக்களேதுமில்லை