அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் பொங்கல் விழா…

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் பொங்கல் விழா நிகழ்வானது (20/01/2022)  காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது.

இன் நிகழ்வினை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் நாட்டார் பாடல் நிகழ்வுகள் மற்றும் மாணவர்களுக்கிடையில் கரப்பந்தாட்ட போட்டி நிகழ்வுகள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பானதாக இடம்பெற்றது.

மேலும் குறித்த நிகழ்வுகளில் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சகோதர பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன் நிகழ்வின் அதிகளாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரத்திக் கல்விப் பண்ணிப்பாளர் திருமதி. M.மயூரன், ஆலையடிவேம்பு பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.K. கங்காதரன் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக ISA இந்துசமயம் திருமதி.P.அழகுதுரை, அன்னை சாரதா தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திருமதி.K.கோமளம், பெருநாவலர் வித்தியாலய அதிபர் திருமதி.U.இராசநாதன், ஒய்வுநிலை அதிபர் திரு.P.தணிகாசலம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்  எனபலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

விளையாட்டு நிகழ்வுகளுக்கான அனுசரணையினை சம்பியன் விளையாட்டுக்கழகத்தினர் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்