காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு கொரோனா தொற்று…

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. காய்ச்சல் இருப்பதையுணர்ந்த தவிசாளர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொண்டு, அன்டிஜன் செய்யவேண்டி ஆலோசனையைக் கேட்டார்.

அதன்படி சிரேஷ்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சா.வேல்முருகு  தலைமையிலான குழுவினர், புதன்கிழமை (19)  தவிசாளரது வீட்டுக்கு விஜயம் செய்து அன்டிஜன் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது தவிசாளர், அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் குடும்பத்தோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் அவரது மனைவியும் ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்