“தீர்வே விடிவு” எனும் தொனிப்பொருளில் மக்களின் பிரச்சினைகளை ஆராயும் கலந்துரையாடல்.

கல்முனை தாருஸ்ஸபா அமையத்தினரின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.  முஷாரப் அவர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு தாருஸபா அமைய பிரதானி மௌலவி ஸபா முகம்மத் தலைமையில் கல்முனையில் இடம்பெற்றது.

கல்முனைப் பிரதேசத்தின் “மக்கள் செயலணி” உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தீர்வை நோக்கிப் பயணப்படும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தீர்வைகளைப் பெற வேண்டும் தமது பிரதேசப் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை எடுத்துரைத்தனர். “தீர்வே விடிவு” என்ற தொனிப்பொருளில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு களமாடும் பாராளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பும் உற்சாகமும் வழங்கி, இந்நிகழ்வில் தாருஸ்ஸபா அமையத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, தாருஸ்ஸபா அமையத்தின் நிர்வாகத்தினர், மக்கள் செயலணி உறுப்பினர்கள், பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல்துறை விரிவுரையாளர் முபிசால் அபூபக்கர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்