இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அழைப்பின்பேரில் கல்வி அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்!!

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன எதிர்வரும் வியாழக்கிழமை 27.01.2022 திகதி
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
அவரது வருகையின் போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் முயற்சியால் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்கினேஸ்வரா தேசிய   பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள தொழினுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிழக்கு  பல்கலைக்கழகம், பாடசாலைகள், கல்வியியற் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவற்றின் அபிவிருத்திகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கல்வி மற்றும் உயர்கல்வித்துறை சார் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலொன்றிலும் கல்வி அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்