இளைஞர் சேனையின் #மனிதநேயபணி …
கல்முனை தமிழ் இளைஞர் சேனையினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நன்னீர் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்தினை மேற்க்கொண்டு வருகின்றோம்
இந்த ஆண்டின் முதற்கட்டமாக ;
கல்முனை சேனைக்குடியிருப்பு துரைவந்தியமேடு பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நன்னீர் மீன்பிடி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சேனையின் பொங்கல் விழாவில் வைத்து மீன்பிடி உபகரணங்களும் அதனுடன் சார்ந்த பொருட்களும் 6 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு 2 பேருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000 படி வழங்கி வைக்கப்பட்டது.
2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்த முழு நிதிப்பங்களிப்பையும் இளைஞர் சேனை உறுப்பினர், சுவிஸ் நாட்டில் வசிக்கும் திருமதி விஜயகுமாரன் (ஜீவா) தனது கணவர் திரு. விஜயகுமாரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வுதவியினை வழங்கி இருந்தார்.
அவர்களுக்கு இளைஞர் சேனையின் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




கருத்துக்களேதுமில்லை