கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்

கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சனிக்கிழமை (29) விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவித்ததாவது

தற்பொழுது வந்திருக்கின்ற பிறழ்வு எவ்வாறான தாக்கத்தை மேற்கொள்ளும் என்பதை எம்மால் எதிர்வு கூறமுடியாது.விழிப்பூட்டப்பட்ட மக்களாகவும் சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றக்கூடியவர்களாகவும் எமது மக்கள் இன்றில் இருந்து மாற வேண்டும்.மேற்படி விடயங்களை மக்கள் புறக்கணித்து வாழ்வார்களாயின் எவ்வாறான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை எம்மால் சொல்ல முடியாது.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.மேலும் இதனை கட்டுப்படுத்த எதிர்வரும் வார காலங்களில் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.எனவே மக்களாகிய நீங்கள் எமது சுகாதார தரப்பினரிற்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.