பா.உ சுமந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்..

(சுமன்)

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்ககோரி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஊடக சந்திப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டத்தில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டு ஒப்பமிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சுகிர்தன் ஆகியோரும் ஒப்பமிட்டு இக்கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

இதேநேரம் தற்போது மிக முக்கிய விடயமாக மீனவர்களின் கோரிக்கைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு தீர்வு கிட்டியதும் அதனை முன்கொண்டு செல்லப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்