இலங்கையின் 74வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது

(சர்ஜுன் லாபீர்,பாறுக் சிஹான்)

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்
74வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(4) நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டது.

மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம் முஹ்கரப், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன், அபிவிருத்தி ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,பிரதம முகாமையாளர் சனூபா நெளபல்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணிப்பிரிவு) யூ.எல் ரமீஸ்,நிதி உதவியாளர் எம்.ஐ.ஏ ரகுமான் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ரமீஸ், எம்.ஹசன், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.