அக்கரைப்பற்றில் வீரகேசரி பத்திரிகைக்கு தடை விதிக்க தீர்மானம் !

வீரகேசரி பத்திரிகையை  அக்கரைப்பற்று பிரதேச சபையின் நூலகத்துக்கு கொள்வனவு செய்வதை தடை செய்ய அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை சண்முகா பாடசாலையில் அபாயா அணிந்து வந்த ஆசிரியை பாடசாலை நிர்வாகத்தினர்  தாக்கிய விடயத்தை திரிவுபடுத்தி வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியியை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையிலான அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் 3ஆம் திகதி வன்மையாக கண்டித்து பத்திரிக்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பேது அக்கரைப்பற்று பிரதேசசபை நூலகசாலையில் வீரகேசரி பத்திரிகை கொள்வனவு செய்யப்பட மாட்டாது என்ற கண்டனத்தீர்மானமும்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தின் முன்மொழிவை  அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யூப் அவர்களினால் முன்மொழியப்பட்டு சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் உண்மைக்கு உண்மை என்று தானே புகழ்ந்து கொள்ளும் சக்தி டிவி, நியூஸ் பெஸ்ட் தொலைக்காட்சியும் சண்முகா பாடசாலை விவகாரத்தில் பக்கச்சார்பாக நடந்து கொண்டதை அக்கரைப்பற்று பிரதேச சபை வன்மையாக கண்டிப்பதுடன் அந்த ஊடகத்துக்கு எதிராக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் அவர்களினால் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.