மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 74 வது சுதந்திர தின நிகழ்வு!!
(கல்லடி நிருபர்)
இலங்கை ஜனநாயக சோசலிசக்
குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது.
இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன் தேசியக் கொடியினையும் ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட
உத்தியோகத்தர்கள், பொலிஸ் உயரதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேசியகொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்தலுடன் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரையினை தொடர்ந்து, இராஜாங்க அமைச்சரின் விசேட உரையும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து சிரேஸ்ட பிரஜையினை கௌரவிக்கும்முகமாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.புண்ணியமூர்த்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச்சின்னர் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சுதந்திர தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலக வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் அதிதிகளினால் நாட்டி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








கருத்துக்களேதுமில்லை